Tuesday, April 19, 2005

Life of பை - பாகம் ஒண்ணு

நீங்க ராபின்சன் குருசோ(Robinson Crusoe) கதை படிச்சிருக்கீங்களா?. என்னுடைய எழாவது இல்ல எட்டாவதுன்னு நெனைக்கிறேன், இங்லீஷ் நாண்டீடைல்ல (English Non-detail) இந்த கதை வந்துச்சு. ராபின்சன் கப்பல்ல போயிகிட்டு இருக்கும்போது, கப்பல் ஒடைஞ்சி அவன் மட்டும் ஒரு சின்ன தீவின் கரையில் வந்து கிடப்பான். தீவ சுத்தி சுத்தி வந்து தப்பிக்க வழியே இல்லன்னு தெரிஞ்சி அங்கேயே வாழ்க்கையை ஓட்டுவான்.

அப்போ எல்லாம் பகல் கனவுல (எட்டாவது படிக்கும் போது) இந்த கதை தான் ஓடிகிட்டிருக்கும். ராபின்சன் இடத்துல நான். ஒரு தீவுக்கு வந்து பானை செஞ்சு, கோழி வளத்து, ஆடு வளத்து, பயிர் வளத்து, வீடு கட்டி வாழ்ந்து ...... இப்படியே கதை வளத்து கனவு கண்டுக்கினுருப்பேன்.

கொஞ்சம் வயசாச்சு ..... (+2 படிச்சிகிட்டிருந்தேன்), வாலிப வயசுல இதே கதைய வேற திரைக்கதை எழுதி ரசிச்சி லயிச்சிப்போயிருந்தேன். அந்த கதையில நானும் ஒரு பொண்ணும் மட்டும் பொழச்சி இருப்போம். அந்த பொண்ணோடு லீலைகள்ள ஈடுபட்டு வாழ்ந்து அனுபவிப்பேன்.

இன்னும் கொஞ்சம் வயசாச்சு என்னுடைய கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது திரும்ப அதே கதை. அப்ப நான் ஒரு பொண்ண லவ் பண்ணிக்கிட்டிருந்தேன் (மெய்யாலுங்க), காதலர்கள் நாங்க மட்டும் தப்பிச்சிருப்போம். இதுல காமம் இல்ல வெறும் காதல் தான். நாங்க அங்க இருக்கற பொதையல எடுத்துக்கினு இந்தியா வந்து சொகமா வாழுவோம்.

Life of Pi யும் அந்த மாதிரி ஒரு கதை தான். அதுக்குள்ள போயிடாதீங்க, இந்த கதையும் அது மாதிரி தான் இருக்குமே தவிர, அதே தான் இல்ல. இந்த நாவல் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு, கதையினுடைய ஆரம்பம் பாண்டிச்சேரியில நடக்குது. ரெண்டு, இந்த நாவலின் ஹிரோ படிச்ச schoolல்ல தான் நானும் படிச்சேன்.
கதாநாயகன் பேர் Piscine Patel. உண்மை கதையாம். நாவலாசிரியர் Yann Martel இந்தியா வந்திருக்கிறார் ஒரு கதை எழுத. அப்படியே மாநிலம் மாநிலமா சுத்தி பாண்டிச்சேரி வந்திருக்கிறார், வந்த எடத்துல Francis Athirubasamy ன்னு பாண்டிச்சேரி வாசிய பாத்திருக்கார். Francis யோட நண்பரின் பையன் 'பை'யின் கதை தான் இது.

Piscine னா பிரெஞ்சுல நீச்சல் குளம்ன்னு அர்த்தம். Piscine னுக்கு இந்த பேர் வெச்சதே Francis Athirubasamy. Francis க்கு நீச்சல குளங்களின் மீது ஒரு அதீத ஆசையாம். இந்த கதை பாண்டியில ஆரம்பிச்சி பசிபிக் பெருங்கடல் வழியா கனடா போய் சேரும். School படிக்கும் போது Piscine ன எல்லாரு Pissing (ஓண்ணுக்குன்னு) தான் கூப்பிடுவாங்களாம். வேற school மாரி (அதான் நான் படிச்ச school -- Petit Seminaire Higher Secondary School - அரம்பிச்சி 150 வருஷத்துக்கு மேல ஆவுது) அந்த schoolல்ல யாரும் அவன ஒண்ணுக்குன்னு கூப்படக்குடாதுன்னு மொத நாள் school board ல அவன் பேர Pi Patel எழுதிடுவான். அதுக்கப்பறம் அவன எல்லாரு Pi - பை ன்னு தான் கூப்பிடுவாங்க. கதை பை யின் அஞ்சு வயசுல ஆரம்பிச்சி பதினாறு வயசுல முடிஞ்சிடும்.

பையோட அப்பா Mr.Patel பாண்டியில ஒரு Zoo வச்சி நடத்தி சொகுசா வாழ்ந்து வந்தார். எமர்ஜன்சி காலம் வந்த போது இந்த ஓரு நமக்கு லாயிக்கி படாதுன்னு முடிவுக்கு வந்து, குடும்பத்தொடு எல்லா விலங்கோடு கனடா போறார்.

கப்பல் சென்னையிலேந்து பொறப்பட்டு பசிபிக் பெருங்கடல் வழிய கனடா போகப்போது. கடல்ல போயிக்கிட்டிருக்கும்போது ஒரு பெரிய விபத்து நடந்து எல்லாரும் மூழ்கிடறாங்க - நாலு பேர தவர (இது ஒரு oxymoron - இப்பத்தான் ஆனந்த விகடன்ல படிச்சேன் - உதரணம் அழகான ராட்சசி). அந்த நாலுப்பேர் யாரு தெரியுமா - பை, கழுத புலி, மனிதக் குரங்கு & வங்க புலி (கங்குலி இல்ல .. நெஜ புலி). இவுங்க நாலு பேரு ஒரு சின்ன படகுல பயனிக்கும் போது நடக்கிற விஷயங்கள் தான் கதையில பெரும் பகுதி. ஒடனே தமிழ் படம் மாதிரி யோசிக்காதீங்க .... பை க்கு கழுதப்புலி மேல லவ்வு ....... கழுதப்புலிக்கு வங்க புலி மேல லவ்வுன்னு.

பை தொடருவாரு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது