Wednesday, March 30, 2005

ஆதாம் ஏவாள் ஆப்பிள் ஐபோடு!

என் Blogக படிக்க வர்றவங்கள கவர்ற மாரி எதாவது எழுதணும்ன்னு தோணுச்சு, அப்பத்தான் Boys படத்துல விவேக் சொன்ன "டேய்! பாட்டெல்லாம் உருவாக்காதீங்கடா, ஒங்க வாழ்க்கையிலேந்து எடுங்கடா" என்ற வசனம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. நெஜமா பெரிய கருத்துங்க!. சரி அப்டி சமீபத்துல என் வாழ்க்கையில என்னத்தி பத்தி சுவாரிசமா பேசிகிட்டிருந்த்தேன்னு யோசிச்சி பாத்தேன் (எப்பாவது யோசிப்பேனுங்க). அந்த யோசிப்பின் பயன் தாங்க இது.
போன வாரம் என் நண்பன் ஹைதராபாத்துலேந்து வந்திருந்தான். அவங்கிட்ட பேசிகிட்டது ஞாபத்துக்கு வந்தது. அவன் ஒரு tech freak க்குங்க (அறிவியல் சார்ந்த விஷயங்கள நெறய படிப்பான்), நல்ல படிப்பாளி கூட (வீடு முழுக்க நெறய புத்தகம் நெறஞ்சிருக்கும் ..... படிப்பாளின்னு காட்றதுக்கு :-) ).
அவுங்க வீட்டுக்கு போயிருந்தேன்.

"இன்னா மச்சான் எப்டி இருக்க?"ன்னு நான் கேட்டேன்.

"ம்ம் .... "ன்னு சொல்லி பாத்து சிரிச்சான், ஒரு பக்கம் LapTopப்ப நோண்டியபடி.

"எவ்ளோடா இந்த LapTop?"

"எந்தம்பிதுடா", அவன பாத்து " How much Rohan?"

Rohan சொன்னான், "35,000"
"LapTop ரொம்ப cheapப்பா ஆயிடுச்சி!"ன்னேன், Aunty தந்த சூடு பறக்கும் காப்பியை வாங்கியப்படி.

கொஞ்ச நேரம் வீட்டிலே ஒட்காந்திருந்தோம், இருப்பு கொள்ளல சரி எங்காவது போலாமுன்னு கெளம்பினோம். போற வழியில இன்னோரு பிரண்டையும் கூட்டிக்கினு போனோம். வேற எங்க போவோம் 'கழுத கெட்டா குட்டி செவுரு', அதான் எங்க குட்டி செவுரு 'பாருக்கு' போனோம்.

சாவகாசமா ஒரு Roof-Top பார்ல போய் ஒட்காந்து ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ணோம்.அவன பேச இழுக்கனுமுன்னு (எவ்ளோ நேரந்த்தான் மூஞ்சியே பாத்துக்குனு இருக்கறது).

"டேய் Pod Casting பத்தி கேள்விபட்டிருக்கியாடா?"ன்னு கேட்டேன். சும்மா நானும் ஒலக விஷயங்கள பத்தி தெரிஞ்சவன்னு காட்டிக்க.

"ம் .... Blogல்ல நீ கிறுக்கற மாரி, Pod Castingல ஒன் கொரல்லே ஒன் ஒலரல்ல பதிவு பண்றது" .
'சே! எல்லா விஷயமும் தெரிஞ்சி வெச்சிக்கிறாண்டா இவன். நம்மள அல்ட உட மாட்டேன்றானே'ன்னு மனசுக்குள்ளே நெனச்சிகிட்டேன்.

அதுகுள்ள பீர் வந்துடுச்சி.

Pod Casting பத்தி நான் படிச்சது கூட ஒரு தமிழ் Blogல்ல தான். ஆனா எந்த Blogன்னு ஞாபகம் வரல. Blogக Internetல பண்ற மாரி Pod Castingக iPodல பண்ணனும். ஐபோடு (ஓ போடு, அப்படி போடு இல்ல, ஐபோடு) பத்தி நான் சமீபத்துல தாங்க கேள்விப்பட்டேன். ஒரு மாதாந்திர ஆங்கில பத்திரிக்கையின்னு நெனைக்கிறேன், iPodஅ தயாரிக்கிற ஆப்பிள்(iMac OS கொண்டு வந்த Apple தாங்க) நிறுவனத்தின் Chief Executive officer, Steve Jobes பேட்டி கொடுத்திருந்தார். அப்பத்தான் மொத மொறயா iPodஅ பத்தி கேள்வி பட்டேன். இப்ப அந்த iPod மற்றும் Apple பத்தி பேசப்போறேன்.
"எழுத்தாளன் என்பவன் நுணுக்கமாக படித்து எழுத வேண்டும்"ன்னு மாதவன் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துல பேசி இருப்பாரு. இன்னாடா இவன் சினிமா வசனத்தையே மேற்கோள் காட்றேன்னு பாக்ரேங்கிலா, ஏன்னா நெறய சினிமா பாப்பேன். அந்த வசனம் உண்ம தாங்க, நான் ஒங்களுக்கு எதவது சொல்லப்போறேன்னுட்டு தப்பு தப்பா சொன்னேன்னா, அப்புறம் சொன்னதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும். அதுக்காக இன்னா பண்ணேன்னு கேக்கிருங்கிளா! ..... iPod பத்தியும் Apple நிறுவனத்த பத்தியும் நெறய விஷயம் சேகரிச்சேன்.

ஆரம்பிச்சிட்டாண்டா!
DAPன்னு சொல்லுவாங்க Digial Audio Players. அதாங்க டேப்புல(Tape) பாட்டு வருதில்ல அதுலாம் Analog, CDல வர்ரதெல்லாம் Digital. DAP காலங்க இது.

பழங்காலத்து பாட்டுக்கேக்க பயன்படுத்தின பெரியயயயயய..... Vaccum Tube Radio போய் ஓரளவுக்கு சின்னதா Transistor வந்து, அந்த Transistorயும் போய் கையடக்க Walk-man வந்து, சீக்கரத்துல வீணா போற Walk-man போய் தெளிவா பாடற Disc-man வந்து, Disc அடிக்கடி மத்தர Disc-man போயி iPod வந்துச்சு (ஓ வந்தாரே சச்சின் சாரி iPod வந்தாரே). மூச்சிவிட்டுக்கிறேன் ........

DAPல மூணு வக
1. CD போட்டு கேக்கறது ஒரு வக.
2. Flash Memory வெச்சி வர்ரது ஒரு வக.
3. Hard Disk Memory வெச்சி வர்ரது ஒரு வக.

ஐபோடு இந்த மூணாவது வக. iPod இப்ப எல்லா DAPயும் தூக்கி சாப்பிட்டிடுச்சி. ரெண்டு CDய தூக்குற மாரி இருக்குமாம்(நான் இன்னும் தூக்கி பாக்கல .... இன்னும் வாங்கல). வெலன்னு பாத்தா 150 அமேரிக்க டாலருக்கு மேல .... சீக்கரத்துல இன்னும் வெல கொறஞ்சிடும். இந்தியாவுல இன்னும் பிரபலம் அடயல. 10GB , 20GBன்னு Hard Disk Memoryயோட வருதுங்க. அப்ப பத்தாயிரம் பாட்டுக்கிட்ட Hard Disk நெனப்புல வெச்சி கேட்கலாம். iPodல இருக்கற பேட்ரி மூலமா பன்ணெண்டு மணி நேரம் தொடர்ந்து பாட்டு கேட்கலாமாம்!.

iPodட பத்தி பேசிக்கின்னிருந்தோம் பாதி பாட்டில் பீர் முடிஞ்சிருந்தது (என் பாட்டில்ல), அவன் இன்னும் கால் வாசி கூட தாண்டல (இதுலயாவது பெரிய ஆள்ன்னு காட்டிட்டோம்ல). உன்னோரு பிரெண்டு கோட வந்தான் இல்ல, அவன் எங்க ரெண்டு பேரையும் பேந்த பேந்த பாத்துக்கிட்டிருந்தான்.

"iPod வாங்க வேண்டியதுதானே மச்சி!" ன்னு கேட்டேன்.

"டொண்டி தவுசண்டு வரும்டா".

"எவ்ளோ செலவு பண்ற வாங்குடா". (பீர் கூட அவந்தான் வாங்கி தர்றான். நான் PG படிக்கிறேன், அவன் UG என் கூட படிச்சிட்டு வேல செயிறான்).

"ஒனக்கு தெரியுமா iPod ஏன் இவ்ளோ பாப்புலர்ன்னு?" - அவன் கேட்டான்.

"ஏன்?"

"நீ 'பாட்டு CD' கடையில வாங்குவியா?"

"இல்ல"

"பின்ன எப்டி பாட்டு கேப்ப?"

"பிரெண்டு யாராவது கொடுத்தா வாங்கி Computerல store பண்ணி கேட்பேன்"

"சரி, இப்ப ஒரு பாட்டு ஒனக்கு 99 அமெரிக்க centல கெடைக்குது, அதுவும் ஒரு மவுசு clickல கெடைக்குதுன்னா , நீ வாங்குவீயா?"

"கண்டிப்பா"

"அதான் iPod பாப்புலர். பாட்டு வாங்காதவங்கலையும் வாங்க வெக்கறாங்க"

Apple நிறுவனத்தின் iPod பிரபலம் அடைஞ்சதுக்கு காரணம் அதே நிறுவனத்தினுடைய iTunes Music Store தான்.iTune Music Store இது பாட்டு விக்ற தளம் (Online Music Store). மிக மலிஞ்ச வெலயில (மலிவு விலை மது மாதிரி) பாட்டு விக்கறாங்கோ. இதனால நெறைய பேர் iPod வாங்கி அவுங்கவுங்களுக்கு புடிச்ச பாட்டெல்லாம் வாங்கி கேட்டு சந்தோஷமடையறாங்க.

"ஆதாம் ஏவாள் ஆப்பிள் ஐபோடு"ன்னு பேர் ஏன் வெச்சிருக்கேன்னு கேக்கரீங்களா?, iPod பத்தி பேசப்போறேன் - அத தயாரிச்ச நிறுவனம் ஆப்பிள். ஆப்பிள்ன்னு சொன்னவுன்னே எனக்கு ஞாபகம் வர்ரதெல்லாம் ஆதாமும் ஏவாளும் தான். ஒங்களுக்கு என்ன தோன்னுது?, தோன்றத இந்த செய்தியோட பின்னோட்டத்துல எழுதுங்க. ஆதாம் ஏவாள்ன்னு எழுதறவங்கள்ளாம் மகா புத்திசாலி!, மத்தவங்க பத்தி நான் சொல்ல விரும்பல :-).

ஆப்பிள் நிறுவனத்தின் கம்பியூட்டரலாம் பாத்திருக்கிங்கிளா!, (டி.வி. லியாவது பாத்திருக்கிங்கிளா .... நான் டி.விலத்தான் பாத்திருக்கேன்) என்ன அழகா இருக்கும். இந்த iPod கூட ரொம்ப அழகா இருக்கும். அழகு மட்டுமில்ல தரமானதா (Quality) இருக்கும்.

என் பிரெண்டு சொன்னான் ... 'யோவ் யார்யா அந்த பிரெண்டு?' கேக்கரீங்களா அத பத்தி வெவரமா இன்னொரு தரம் சொல்றேன். ஒலகத்துல மனுஷங்க ரெண்டு வகையாம்: ஒருத்தர் கலைஞானியாம் (Artist), இன்னொருத்தர் அறிவுஞானியாம் (Scientist). கலைஞானி அழகான (Beauty) பொருள தயாரிப்பவராம், அறிவுஞானி தரமான (Quality) பொருளை தயாரிப்பவராம். அவன் சொன்னான் நான் கலைஞானியாம், அவன் அறிவுஞானியாம். ஏன்னா நான் கவிதைகள ரசிப்பவனாம். IBM நிறுவனத்தின் கம்பியூட்டரெல்லாம் தரமானதா இருக்கும் ஆனா பாக்க அழகா இருக்காது, ஆனா Apple நிறுவனத்தின் கம்பியூட்டரெல்லாம் தரமானதாகவும், அழகாகவும் இருக்கும். இதுக்கு காரணம் என்னன்னு பாத்திங்கீன்னா அவுங்க கலைஞானியையும், அறிவுஞானியையும் வெச்சி வேல வாங்குறாங்கலாம்.
Beauty and Beast ன்னு Appleலுக்கு பேர் வெக்கலாம்.

'Zen and the Art of Motorcycle maintenance' என்ற புத்தகத்துல இந்த தரம் மற்றும் அழகு பத்தி படிச்சானாம். நான் அந்த புத்தகத்த புடிங்கின்னு வந்துட்டேன்னு. நானும் படிச்சி பெரிய ஆளா வர்றதுக்குத்தான்!. இப்ப இன்னொரு புத்தகமும் படிச்சிக்கிட்டிருக்கேன், 'Life of Pi" By Yann Martel - Booker பரிசு வாங்கன புத்தகம் தாங்க. நல்லா இருக்குங்க, புரிஞ்சி படிச்சி தெளிஞ்சி ஒங்களுக்கு எழுதறேன்.

இவ்ளோ சொல்லிட்டு யாரு iPod உருவாக்கனதுன்னு சொல்லலேனா அது நியாயமே இல்லைங்க. Tony Fadellலுக்கு தன் iPod பத்தி ஐடியா வந்துது, ஆனா தலைவரு கைல காசு இல்ல விஷயத்த Apple கிட்ட சொன்னாரு - iPod வந்துச்சு.
இந்த விஷயங்கல சேகரிச்ச யடம் Wikipedia.

வர்டா
ஜெய்

2 Comments:

Blogger kirukan said...

நல்லாதான் எழுதுற....நிறைய எழுதுப்பா

11:14 AM  
Blogger selva said...

aiyo aiyo

11:19 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது