Thursday, May 20, 2010

3 இடியட்ஸ்

சேத்தன் பகத்தோட Five Point someone ஓரு அருமையான நாவல். நல்ல கதையோட்டம் எளிமையான மொழி. இந்த நாவல நான் படிக்கும்போது ஒரு திரைப்படத்திற்கு உண்டான திரைக்கதை அமைப்பு இருக்குனு நினைத்தேன். வழக்கம் போல படம் எடுக்கிறேனு நாவல கெடுத்துடாங்க. கேட்டா நாவலோட தழுவல்ன்னு சொல்லுவாங்க.





மூணு முக்கிய கதாபாத்திரங்கள் , IITல அவங்க சேர்ந்து , அத புரிஞ்சி , தெரிஞ்சி, அனுபவப்பட்டு , சந்தோஷமா போறதுதான் கதை. IIT ஓரு பெரிய பிம்பம், சேத்தன் மாதிரி அதுல படிச்சவங்க சொன்னா அத பற்றி தெளிவா தெரியுது. இது ஒரு மசாலா கதைதான், ஆனா விஜய் படம் போல மட்டமான மசாலா இல்லை மணிரத்னம் படம் மாதிரி மசாலா. மணிரத்னம் மசாலா எனக்கு ரொம்ப பிடிக்கும். மணி Direct பண்ணியிருந்தா நாவல அப்படியே எடுத்திருபாரு. நாவலோட Climaxa எடுக்கறது கஷ்டந்தான். ஆமிர்கானாவது இதுக்கு ஒத்திருக்க கூடாது.









அதவிட பெரிய கொடுமை கோடம்பாக்கத்துல நடக்கபோகுது. விஜய் நடிக்கபோராராம் ஆமிர்கான் பாத்திரத்துல .... என்ன கொடும சார் இது! இந்த படம் எடுக்கறவங்க நெஜமா 3 இடியட்ஸ் தான்.

வர்டா

Wednesday, May 19, 2010

ஆர்ஹான் பாமுக் - துருக்கி எழுத்தாளர்

ஒரு வெள்ளை மாளிகை - A While Caste - நான் வாசித்த ஆர்ஹான் பாமுக்கின் முதல் நாவல். வழக்கம் போல என் நண்பன் Gavriயின் புண்ணியத்தில் இந்த புத்தகம் கிடைத்தது. சொன்ன நம்ப மாடீங்க Hydreabadலிருந்து சென்னை அவன் மாத்தல் ஆகி வந்தபோது கொஞ்சம் புத்தகம் விட்டுட்டு வந்துட்டேன்னு சொன்னான், பாத்தா ஒரு புத்தக மூட்டையே வருது - 200 புத்தகம் இருக்கும். அந்த புத்தகத்தெல்லாம் அறை முழுக்க பரப்பி போட்டு ஆச்சர்ய பட்டேன்.

இந்த புத்தகம் கிடைக்கறதுக்கு முன்னாடி S.Ramakrishnanயோட 'விழித்திருப்பவனின் இரவு' வாங்கி இருந்தேன். அதில் ஆர்ஹான் பாமுக் பற்றியும் அவரோட My name is Red பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.


A White Castle - ஒரு வித்தியாசமான நாவல். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒட்டமான் ராஜ்ஜியத்தில் வாழ்ந்த ஒரு விஞ்ஞானியோட கதை.

இந்த ஆர்வத்தால ஆர்ஹான் பாமுக்கின் 'Snow' வாங்கினேன். சென்னையின் கத்திரி வெயிலில் படித்தேன். பனிக்காக ஏங்கினேன். பனி அந்த கதையின் நாயகன்.



My name is Redயும் கடைசியா படிச்சேன். ஒரு கதை எழுத இவ்வளவு ஆராய்ச்சி பண்ணுவாங்கலான்னு ஆச்சர்யமா இருந்தது. சுஜாதா சொன்னா மாதிரி கதை எழுத நிறைய படிக்கணும்.

இப்ப The Museum of Innocence படிக்கிறேன். விண்ணைத்தாண்டி வருவாய feel தருது ... அத விட அருமையா இருக்கு.

எல்லோரும் படித்து ரசிங்க.

வர்டா!

Thursday, February 08, 2007

ஓர் இரவு

மணி ஒன்று இருக்கும். இரவு தான்.
என்னுடைய நண்பர்கள் அனைவரும் அவரவர் அறைகளில் கோழிகளைப் போல அடைந்து கொண்டார்கள். நான் நாங்கள் வசிக்கும் வீட்டின் விஸ்தாரமான ஹாலில் தொலைக்காட்சியை பார்க்க உட்கார்ந்து விட்டேன்.
Remote - Power ON
SS Music - Smithaவின் ரிமிக்x. ஆல்பம் பெயர் மறந்துவிட்டது.
"ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்" - இளையராஜாவின் பாடல் புது பரிமாணாம் பெற்று ஓடிக்கொண்டிருந்தது. Smithaவை ரசித்து கொண்டிருந்தேன்.
உணர்வு - பெரும் ஆனந்தம்
CH+ -------------- Channel மாற்றுகிறேன். வேறொன்றுமில்லை.
CNB-IBN - News
ICICI வங்கி வீட்டு கடனுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை 9% மாக உயர்த்திவிட்டதாம். இப்படியே வட்டி விகிதத்தை உயர்திக்கொண்டே போனால் நான் எப்போது கடன் வாங்கி வீடு வாங்குவது.
உணர்வு - வருத்தம்
CH+ --------------
சன் செய்திகள்
கர்நாடகவில் அமைதியானா போராட்டங்கள் மட்டுமே நிலவுகின்றன.
காவிரி தண்ணீர் பகிர்ந்தளிப்பு பற்றி காவிரி ஆணையம் தீர்ப்பு அளித்து இரண்டு நாட்கள் ஆகின்றது. முன்பு வெடித்த கலவரம் போல் எதுவும் இல்லாமல் இருந்தால் சரி.
உணர்வு - வேண்டுதல்
CH+ --------------
Fashion TV
Modleகளின் அணிவகுப்பு.
உணர்வு - ஏக்கம் (இந்த ஒரு வார்த்தை போதும் என்று நினைக்கிறேன்)
CH+ --------------
Pogo
Just for Laughs Gags
நிறைய பொம்மைகளுக்கு நடுவே அதே போல் தோற்றத்தோடு உடையணிந்து ஒரு பெண் நிற்கிறார். கடை உரிமையாளர் சாலையில் போகும் ஒருவரை கூப்பிட்டு பொம்மைகளை ஒரு வாகனத்தில் ஏற்றுவதற்க்கு தனக்கு உதவும் படி கேட்டிறார்.
அந்த அப்பாவி ஒவ்வொரு பொம்மையாக எடுத்து தருகிறார். அந்த் பெண்ணை தொட்டு தூக்க முயலும் போது அதிர்கிறார்.
Lots of Laugh
ஒக்காந்து யோசிப்பாங்களோ!
உணர்வு - Lots of Laugh

CH+ --------------
BBC Hard Talk
நிகழ்ச்சி முடியும் தருணம். ஓரு கருப்பின பெண்ணோடு ஒரு கலந்துரையாடல். எதை பற்றி என்று தெரியவில்லை.
உணர்வு - Blank
CH+ --------------
பொதிகை
"முதல் மரியாதை" படப் பாடல்கள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கு வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததிங்கோடா!
...................................
...................................
சாதி மத பேதமெல்லாம் முன்னவங்க செஞ்சமோசம்!
என்ன வரிகள். எண்ண வைக்கும் வரிகள். கிராமத்து மணத்தோடு நல்ல கருத்துகளோடு.
We miss this Trio - Bharathiraja - Vairamuthu - Ilayaraja!
உணர்வு - மகிழ்ச்சி மற்றும் வருத்தம்.
CH+ --------------
SS Music
மறுபடியுமா! எதோ ஒரு பாடல் ..... மனதில் பதியவில்லை.
Remote - Power off
தூக்கம் வந்தது. நானும் என் அறையில் சென்று அடைந்து கொண்டேன். ஹால் விஸ்தாரமாக இருந்தது. தனியாக.
வர்டா!

Wednesday, October 18, 2006

ஐநூறு ருபாய் இருக்குமா?


போன வாரம் நான் Romain Roland Library போயிருந்தேன். ரொம்ப bore அடிச்சுது. எதாவது ஒரு புத்தகம் எடுத்து படிக்கலாம் நெனைச்சு தேடிகிட்டிருந்தேன். அப்ப "கல்கி களஞ்சியம் - தொகுப்பு I" புத்தகம் இருந்தது.

கல்கியோட படைப்புகளை நான் அதிகம் படிச்சதில்லை. இன்னும் சொல்லனும்னா ரெண்டே ரெண்டு படைப்புகள் தான் படிச்சியிருக்கேன். ஓண்ணு ஒரு சிறுகதை - பத்து வருஷத்துக்கு முன்னாடி குமுதம் தீபாவளி மலரில் வந்தது. அந்த தீபாவளி மலரில் வந்த கதைகளை நான் இன்னும் மறக்கவில்லை. அப்ப இருந்த பெரிய எழுத்தாளர்களிடம் அவங்களுக்கு பிடிச்ச கதைகளை கேட்டு பிரசுரம் பண்ணியிருந்தார்கள். அந்த கதைகளை இன்னொரு வலை பதிவில் எழுதறேன்.

கல்கியின் "சிவகாமியின் சபதம்" நாவலை சமீபத்தில் படிச்சேன். மகேந்திர பல்லவரையும் நரசிம்ம பல்லவரையும் என் கண் முன்னாடி வந்து நிறுத்தியது அந்த நாவல். இந்த நாவலை பற்றியும் சொல்லறேன்.
இப்படி கவரப்பட்டு தான் இந்த "கல்கி களஞ்சியம் - தொகுப்பு I" புத்தகத்த தேரிந்தெடுத்தேன்.

இந்த புத்தகத்துல அவரோட தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகள் இருந்தன. "ஐநூறு ருபாய் இருக்குமா?" - என்பது ஒரு தலையங்கம். எழுதப்பட்ட வருஷம் 1933.

நமக்கு இப்ப தான் தெரியுது பங்குன்னா (Share) என்ன பங்கு சந்தைனா என்னன்னு. கல்கி இதை பற்றி அப்பவே அருமையா விவரித்திருக்கார்.
அந்த வருஷம் சர்கார் (உங்கள அந்த காலத்துக்கு கொண்டு போறேன்) Reserve Bank of India (RBI) ஆரம்பித்த வருஷம். ஒரு சுவாரசியமான தகவல் - RBIயோட முதலீடு எவ்வளவு தெரியுமா? வெறும் 500 கோடி ருபாய் தான். RBI பொதுவுடமை (Public) வங்கி ஆக்கப்பட்டது. மொத்தம் 5 லட்சம் பங்குகள் விற்க்கப்பட்டன. ஒரு பங்கின் விலை 100 ரூபாய்.

கல்கி 500 ரூபாய் இருக்குதான்னு கேட்டதுக்கு காரணம் இது தான். வசதி படைத்தவங்க (500 ரூபாய் அப்ப பெரிய பணம்) 500 ரூபாய் வெச்சியிருந்தாங்கனா 5 பங்குகள் வாங்குங்கன்னு கேட்டுகிட்டார். இதற்க்கு காரணம் அவர் என்ன சொல்லரார்னா - இந்த பங்குகள் மூலம் நாம் RBI ன் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதோடு நம் பணமும் பத்திரமாக இருக்கும்.

Thats கல்கி.

ஆனந்த விகடனில் "ஓ பக்கம்" எழுதற ஞானியும் இது மாதிரி நல்ல தகவல்களோட எழுதரார்.

வர்டா!

Sunday, May 08, 2005

பையில் கொஞ்சம் தையல்

நான் சொன்ன பையின் கதையில் நிறைய ஓட்டை இருப்பதாக நண்பர் கேவ்ரி குறிப்பிட்டிருந்தாரு. ஓட்டைய சுட்டி காட்டிதற்க்கு மிக்க நன்றி நண்பரே.

இது உண்மை கதையின்னு சொல்லிருந்தேன். இது ஒரு கற்பனை கதை. கதாசிரியர் புதுவைக்கு வந்ததே இல்லையாம்.

பையின் மீதி கதையை சீக்கிரமே சொல்லிடறேன்.

Tuesday, April 19, 2005

Life of பை - பாகம் ஒண்ணு

நீங்க ராபின்சன் குருசோ(Robinson Crusoe) கதை படிச்சிருக்கீங்களா?. என்னுடைய எழாவது இல்ல எட்டாவதுன்னு நெனைக்கிறேன், இங்லீஷ் நாண்டீடைல்ல (English Non-detail) இந்த கதை வந்துச்சு. ராபின்சன் கப்பல்ல போயிகிட்டு இருக்கும்போது, கப்பல் ஒடைஞ்சி அவன் மட்டும் ஒரு சின்ன தீவின் கரையில் வந்து கிடப்பான். தீவ சுத்தி சுத்தி வந்து தப்பிக்க வழியே இல்லன்னு தெரிஞ்சி அங்கேயே வாழ்க்கையை ஓட்டுவான்.

அப்போ எல்லாம் பகல் கனவுல (எட்டாவது படிக்கும் போது) இந்த கதை தான் ஓடிகிட்டிருக்கும். ராபின்சன் இடத்துல நான். ஒரு தீவுக்கு வந்து பானை செஞ்சு, கோழி வளத்து, ஆடு வளத்து, பயிர் வளத்து, வீடு கட்டி வாழ்ந்து ...... இப்படியே கதை வளத்து கனவு கண்டுக்கினுருப்பேன்.

கொஞ்சம் வயசாச்சு ..... (+2 படிச்சிகிட்டிருந்தேன்), வாலிப வயசுல இதே கதைய வேற திரைக்கதை எழுதி ரசிச்சி லயிச்சிப்போயிருந்தேன். அந்த கதையில நானும் ஒரு பொண்ணும் மட்டும் பொழச்சி இருப்போம். அந்த பொண்ணோடு லீலைகள்ள ஈடுபட்டு வாழ்ந்து அனுபவிப்பேன்.

இன்னும் கொஞ்சம் வயசாச்சு என்னுடைய கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது திரும்ப அதே கதை. அப்ப நான் ஒரு பொண்ண லவ் பண்ணிக்கிட்டிருந்தேன் (மெய்யாலுங்க), காதலர்கள் நாங்க மட்டும் தப்பிச்சிருப்போம். இதுல காமம் இல்ல வெறும் காதல் தான். நாங்க அங்க இருக்கற பொதையல எடுத்துக்கினு இந்தியா வந்து சொகமா வாழுவோம்.

Life of Pi யும் அந்த மாதிரி ஒரு கதை தான். அதுக்குள்ள போயிடாதீங்க, இந்த கதையும் அது மாதிரி தான் இருக்குமே தவிர, அதே தான் இல்ல. இந்த நாவல் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு, கதையினுடைய ஆரம்பம் பாண்டிச்சேரியில நடக்குது. ரெண்டு, இந்த நாவலின் ஹிரோ படிச்ச schoolல்ல தான் நானும் படிச்சேன்.
கதாநாயகன் பேர் Piscine Patel. உண்மை கதையாம். நாவலாசிரியர் Yann Martel இந்தியா வந்திருக்கிறார் ஒரு கதை எழுத. அப்படியே மாநிலம் மாநிலமா சுத்தி பாண்டிச்சேரி வந்திருக்கிறார், வந்த எடத்துல Francis Athirubasamy ன்னு பாண்டிச்சேரி வாசிய பாத்திருக்கார். Francis யோட நண்பரின் பையன் 'பை'யின் கதை தான் இது.

Piscine னா பிரெஞ்சுல நீச்சல் குளம்ன்னு அர்த்தம். Piscine னுக்கு இந்த பேர் வெச்சதே Francis Athirubasamy. Francis க்கு நீச்சல குளங்களின் மீது ஒரு அதீத ஆசையாம். இந்த கதை பாண்டியில ஆரம்பிச்சி பசிபிக் பெருங்கடல் வழியா கனடா போய் சேரும். School படிக்கும் போது Piscine ன எல்லாரு Pissing (ஓண்ணுக்குன்னு) தான் கூப்பிடுவாங்களாம். வேற school மாரி (அதான் நான் படிச்ச school -- Petit Seminaire Higher Secondary School - அரம்பிச்சி 150 வருஷத்துக்கு மேல ஆவுது) அந்த schoolல்ல யாரும் அவன ஒண்ணுக்குன்னு கூப்படக்குடாதுன்னு மொத நாள் school board ல அவன் பேர Pi Patel எழுதிடுவான். அதுக்கப்பறம் அவன எல்லாரு Pi - பை ன்னு தான் கூப்பிடுவாங்க. கதை பை யின் அஞ்சு வயசுல ஆரம்பிச்சி பதினாறு வயசுல முடிஞ்சிடும்.

பையோட அப்பா Mr.Patel பாண்டியில ஒரு Zoo வச்சி நடத்தி சொகுசா வாழ்ந்து வந்தார். எமர்ஜன்சி காலம் வந்த போது இந்த ஓரு நமக்கு லாயிக்கி படாதுன்னு முடிவுக்கு வந்து, குடும்பத்தொடு எல்லா விலங்கோடு கனடா போறார்.

கப்பல் சென்னையிலேந்து பொறப்பட்டு பசிபிக் பெருங்கடல் வழிய கனடா போகப்போது. கடல்ல போயிக்கிட்டிருக்கும்போது ஒரு பெரிய விபத்து நடந்து எல்லாரும் மூழ்கிடறாங்க - நாலு பேர தவர (இது ஒரு oxymoron - இப்பத்தான் ஆனந்த விகடன்ல படிச்சேன் - உதரணம் அழகான ராட்சசி). அந்த நாலுப்பேர் யாரு தெரியுமா - பை, கழுத புலி, மனிதக் குரங்கு & வங்க புலி (கங்குலி இல்ல .. நெஜ புலி). இவுங்க நாலு பேரு ஒரு சின்ன படகுல பயனிக்கும் போது நடக்கிற விஷயங்கள் தான் கதையில பெரும் பகுதி. ஒடனே தமிழ் படம் மாதிரி யோசிக்காதீங்க .... பை க்கு கழுதப்புலி மேல லவ்வு ....... கழுதப்புலிக்கு வங்க புலி மேல லவ்வுன்னு.

பை தொடருவாரு

Wednesday, March 30, 2005

ஆதாம் ஏவாள் ஆப்பிள் ஐபோடு!

என் Blogக படிக்க வர்றவங்கள கவர்ற மாரி எதாவது எழுதணும்ன்னு தோணுச்சு, அப்பத்தான் Boys படத்துல விவேக் சொன்ன "டேய்! பாட்டெல்லாம் உருவாக்காதீங்கடா, ஒங்க வாழ்க்கையிலேந்து எடுங்கடா" என்ற வசனம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. நெஜமா பெரிய கருத்துங்க!. சரி அப்டி சமீபத்துல என் வாழ்க்கையில என்னத்தி பத்தி சுவாரிசமா பேசிகிட்டிருந்த்தேன்னு யோசிச்சி பாத்தேன் (எப்பாவது யோசிப்பேனுங்க). அந்த யோசிப்பின் பயன் தாங்க இது.
போன வாரம் என் நண்பன் ஹைதராபாத்துலேந்து வந்திருந்தான். அவங்கிட்ட பேசிகிட்டது ஞாபத்துக்கு வந்தது. அவன் ஒரு tech freak க்குங்க (அறிவியல் சார்ந்த விஷயங்கள நெறய படிப்பான்), நல்ல படிப்பாளி கூட (வீடு முழுக்க நெறய புத்தகம் நெறஞ்சிருக்கும் ..... படிப்பாளின்னு காட்றதுக்கு :-) ).
அவுங்க வீட்டுக்கு போயிருந்தேன்.

"இன்னா மச்சான் எப்டி இருக்க?"ன்னு நான் கேட்டேன்.

"ம்ம் .... "ன்னு சொல்லி பாத்து சிரிச்சான், ஒரு பக்கம் LapTopப்ப நோண்டியபடி.

"எவ்ளோடா இந்த LapTop?"

"எந்தம்பிதுடா", அவன பாத்து " How much Rohan?"

Rohan சொன்னான், "35,000"
"LapTop ரொம்ப cheapப்பா ஆயிடுச்சி!"ன்னேன், Aunty தந்த சூடு பறக்கும் காப்பியை வாங்கியப்படி.

கொஞ்ச நேரம் வீட்டிலே ஒட்காந்திருந்தோம், இருப்பு கொள்ளல சரி எங்காவது போலாமுன்னு கெளம்பினோம். போற வழியில இன்னோரு பிரண்டையும் கூட்டிக்கினு போனோம். வேற எங்க போவோம் 'கழுத கெட்டா குட்டி செவுரு', அதான் எங்க குட்டி செவுரு 'பாருக்கு' போனோம்.

சாவகாசமா ஒரு Roof-Top பார்ல போய் ஒட்காந்து ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ணோம்.அவன பேச இழுக்கனுமுன்னு (எவ்ளோ நேரந்த்தான் மூஞ்சியே பாத்துக்குனு இருக்கறது).

"டேய் Pod Casting பத்தி கேள்விபட்டிருக்கியாடா?"ன்னு கேட்டேன். சும்மா நானும் ஒலக விஷயங்கள பத்தி தெரிஞ்சவன்னு காட்டிக்க.

"ம் .... Blogல்ல நீ கிறுக்கற மாரி, Pod Castingல ஒன் கொரல்லே ஒன் ஒலரல்ல பதிவு பண்றது" .
'சே! எல்லா விஷயமும் தெரிஞ்சி வெச்சிக்கிறாண்டா இவன். நம்மள அல்ட உட மாட்டேன்றானே'ன்னு மனசுக்குள்ளே நெனச்சிகிட்டேன்.

அதுகுள்ள பீர் வந்துடுச்சி.

Pod Casting பத்தி நான் படிச்சது கூட ஒரு தமிழ் Blogல்ல தான். ஆனா எந்த Blogன்னு ஞாபகம் வரல. Blogக Internetல பண்ற மாரி Pod Castingக iPodல பண்ணனும். ஐபோடு (ஓ போடு, அப்படி போடு இல்ல, ஐபோடு) பத்தி நான் சமீபத்துல தாங்க கேள்விப்பட்டேன். ஒரு மாதாந்திர ஆங்கில பத்திரிக்கையின்னு நெனைக்கிறேன், iPodஅ தயாரிக்கிற ஆப்பிள்(iMac OS கொண்டு வந்த Apple தாங்க) நிறுவனத்தின் Chief Executive officer, Steve Jobes பேட்டி கொடுத்திருந்தார். அப்பத்தான் மொத மொறயா iPodஅ பத்தி கேள்வி பட்டேன். இப்ப அந்த iPod மற்றும் Apple பத்தி பேசப்போறேன்.
"எழுத்தாளன் என்பவன் நுணுக்கமாக படித்து எழுத வேண்டும்"ன்னு மாதவன் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துல பேசி இருப்பாரு. இன்னாடா இவன் சினிமா வசனத்தையே மேற்கோள் காட்றேன்னு பாக்ரேங்கிலா, ஏன்னா நெறய சினிமா பாப்பேன். அந்த வசனம் உண்ம தாங்க, நான் ஒங்களுக்கு எதவது சொல்லப்போறேன்னுட்டு தப்பு தப்பா சொன்னேன்னா, அப்புறம் சொன்னதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும். அதுக்காக இன்னா பண்ணேன்னு கேக்கிருங்கிளா! ..... iPod பத்தியும் Apple நிறுவனத்த பத்தியும் நெறய விஷயம் சேகரிச்சேன்.

ஆரம்பிச்சிட்டாண்டா!
DAPன்னு சொல்லுவாங்க Digial Audio Players. அதாங்க டேப்புல(Tape) பாட்டு வருதில்ல அதுலாம் Analog, CDல வர்ரதெல்லாம் Digital. DAP காலங்க இது.

பழங்காலத்து பாட்டுக்கேக்க பயன்படுத்தின பெரியயயயயய..... Vaccum Tube Radio போய் ஓரளவுக்கு சின்னதா Transistor வந்து, அந்த Transistorயும் போய் கையடக்க Walk-man வந்து, சீக்கரத்துல வீணா போற Walk-man போய் தெளிவா பாடற Disc-man வந்து, Disc அடிக்கடி மத்தர Disc-man போயி iPod வந்துச்சு (ஓ வந்தாரே சச்சின் சாரி iPod வந்தாரே). மூச்சிவிட்டுக்கிறேன் ........

DAPல மூணு வக
1. CD போட்டு கேக்கறது ஒரு வக.
2. Flash Memory வெச்சி வர்ரது ஒரு வக.
3. Hard Disk Memory வெச்சி வர்ரது ஒரு வக.

ஐபோடு இந்த மூணாவது வக. iPod இப்ப எல்லா DAPயும் தூக்கி சாப்பிட்டிடுச்சி. ரெண்டு CDய தூக்குற மாரி இருக்குமாம்(நான் இன்னும் தூக்கி பாக்கல .... இன்னும் வாங்கல). வெலன்னு பாத்தா 150 அமேரிக்க டாலருக்கு மேல .... சீக்கரத்துல இன்னும் வெல கொறஞ்சிடும். இந்தியாவுல இன்னும் பிரபலம் அடயல. 10GB , 20GBன்னு Hard Disk Memoryயோட வருதுங்க. அப்ப பத்தாயிரம் பாட்டுக்கிட்ட Hard Disk நெனப்புல வெச்சி கேட்கலாம். iPodல இருக்கற பேட்ரி மூலமா பன்ணெண்டு மணி நேரம் தொடர்ந்து பாட்டு கேட்கலாமாம்!.

iPodட பத்தி பேசிக்கின்னிருந்தோம் பாதி பாட்டில் பீர் முடிஞ்சிருந்தது (என் பாட்டில்ல), அவன் இன்னும் கால் வாசி கூட தாண்டல (இதுலயாவது பெரிய ஆள்ன்னு காட்டிட்டோம்ல). உன்னோரு பிரெண்டு கோட வந்தான் இல்ல, அவன் எங்க ரெண்டு பேரையும் பேந்த பேந்த பாத்துக்கிட்டிருந்தான்.

"iPod வாங்க வேண்டியதுதானே மச்சி!" ன்னு கேட்டேன்.

"டொண்டி தவுசண்டு வரும்டா".

"எவ்ளோ செலவு பண்ற வாங்குடா". (பீர் கூட அவந்தான் வாங்கி தர்றான். நான் PG படிக்கிறேன், அவன் UG என் கூட படிச்சிட்டு வேல செயிறான்).

"ஒனக்கு தெரியுமா iPod ஏன் இவ்ளோ பாப்புலர்ன்னு?" - அவன் கேட்டான்.

"ஏன்?"

"நீ 'பாட்டு CD' கடையில வாங்குவியா?"

"இல்ல"

"பின்ன எப்டி பாட்டு கேப்ப?"

"பிரெண்டு யாராவது கொடுத்தா வாங்கி Computerல store பண்ணி கேட்பேன்"

"சரி, இப்ப ஒரு பாட்டு ஒனக்கு 99 அமெரிக்க centல கெடைக்குது, அதுவும் ஒரு மவுசு clickல கெடைக்குதுன்னா , நீ வாங்குவீயா?"

"கண்டிப்பா"

"அதான் iPod பாப்புலர். பாட்டு வாங்காதவங்கலையும் வாங்க வெக்கறாங்க"

Apple நிறுவனத்தின் iPod பிரபலம் அடைஞ்சதுக்கு காரணம் அதே நிறுவனத்தினுடைய iTunes Music Store தான்.iTune Music Store இது பாட்டு விக்ற தளம் (Online Music Store). மிக மலிஞ்ச வெலயில (மலிவு விலை மது மாதிரி) பாட்டு விக்கறாங்கோ. இதனால நெறைய பேர் iPod வாங்கி அவுங்கவுங்களுக்கு புடிச்ச பாட்டெல்லாம் வாங்கி கேட்டு சந்தோஷமடையறாங்க.

"ஆதாம் ஏவாள் ஆப்பிள் ஐபோடு"ன்னு பேர் ஏன் வெச்சிருக்கேன்னு கேக்கரீங்களா?, iPod பத்தி பேசப்போறேன் - அத தயாரிச்ச நிறுவனம் ஆப்பிள். ஆப்பிள்ன்னு சொன்னவுன்னே எனக்கு ஞாபகம் வர்ரதெல்லாம் ஆதாமும் ஏவாளும் தான். ஒங்களுக்கு என்ன தோன்னுது?, தோன்றத இந்த செய்தியோட பின்னோட்டத்துல எழுதுங்க. ஆதாம் ஏவாள்ன்னு எழுதறவங்கள்ளாம் மகா புத்திசாலி!, மத்தவங்க பத்தி நான் சொல்ல விரும்பல :-).

ஆப்பிள் நிறுவனத்தின் கம்பியூட்டரலாம் பாத்திருக்கிங்கிளா!, (டி.வி. லியாவது பாத்திருக்கிங்கிளா .... நான் டி.விலத்தான் பாத்திருக்கேன்) என்ன அழகா இருக்கும். இந்த iPod கூட ரொம்ப அழகா இருக்கும். அழகு மட்டுமில்ல தரமானதா (Quality) இருக்கும்.

என் பிரெண்டு சொன்னான் ... 'யோவ் யார்யா அந்த பிரெண்டு?' கேக்கரீங்களா அத பத்தி வெவரமா இன்னொரு தரம் சொல்றேன். ஒலகத்துல மனுஷங்க ரெண்டு வகையாம்: ஒருத்தர் கலைஞானியாம் (Artist), இன்னொருத்தர் அறிவுஞானியாம் (Scientist). கலைஞானி அழகான (Beauty) பொருள தயாரிப்பவராம், அறிவுஞானி தரமான (Quality) பொருளை தயாரிப்பவராம். அவன் சொன்னான் நான் கலைஞானியாம், அவன் அறிவுஞானியாம். ஏன்னா நான் கவிதைகள ரசிப்பவனாம். IBM நிறுவனத்தின் கம்பியூட்டரெல்லாம் தரமானதா இருக்கும் ஆனா பாக்க அழகா இருக்காது, ஆனா Apple நிறுவனத்தின் கம்பியூட்டரெல்லாம் தரமானதாகவும், அழகாகவும் இருக்கும். இதுக்கு காரணம் என்னன்னு பாத்திங்கீன்னா அவுங்க கலைஞானியையும், அறிவுஞானியையும் வெச்சி வேல வாங்குறாங்கலாம்.
Beauty and Beast ன்னு Appleலுக்கு பேர் வெக்கலாம்.

'Zen and the Art of Motorcycle maintenance' என்ற புத்தகத்துல இந்த தரம் மற்றும் அழகு பத்தி படிச்சானாம். நான் அந்த புத்தகத்த புடிங்கின்னு வந்துட்டேன்னு. நானும் படிச்சி பெரிய ஆளா வர்றதுக்குத்தான்!. இப்ப இன்னொரு புத்தகமும் படிச்சிக்கிட்டிருக்கேன், 'Life of Pi" By Yann Martel - Booker பரிசு வாங்கன புத்தகம் தாங்க. நல்லா இருக்குங்க, புரிஞ்சி படிச்சி தெளிஞ்சி ஒங்களுக்கு எழுதறேன்.

இவ்ளோ சொல்லிட்டு யாரு iPod உருவாக்கனதுன்னு சொல்லலேனா அது நியாயமே இல்லைங்க. Tony Fadellலுக்கு தன் iPod பத்தி ஐடியா வந்துது, ஆனா தலைவரு கைல காசு இல்ல விஷயத்த Apple கிட்ட சொன்னாரு - iPod வந்துச்சு.
இந்த விஷயங்கல சேகரிச்ச யடம் Wikipedia.

வர்டா
ஜெய்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது